follow the truth

follow the truth

December, 13, 2024
HomeTOP2அமைச்சரவைக்கு முஸ்லிம்கள் நியமிக்கப்படாமைக்கு இதுதான் காரணம்

அமைச்சரவைக்கு முஸ்லிம்கள் நியமிக்கப்படாமைக்கு இதுதான் காரணம்

Published on

அமைச்சரவைக்கு மிகவும் தகுதியானவர்களை நாம் நியமித்துள்ளோம் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

முஸ்லிம் மக்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்காமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. அமைச்சரவைக்கு மிகவும் தகுதியானவர்களை நாம் நியமித்துள்ளோம். அங்கு ஜாதி இனம் குலத்திற்கு நாம் முக்கியத்துவம் வழங்கவில்லை.

உண்மையில் நாம் மேல்மாகாண ஆளுநராக முஸ்லிம் வியாபாரி ஒருவரை நியமித்தோம். பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு முஸ்லிம் நபரை நாம் நாடாளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியலில் உள்வாங்கி இருக்கிறோம்.

உண்மையில் எங்களுக்கு இலங்கை தேசம் தான் இங்கு முக்கியம். அதனையே நாம் பாதுகாக்கிறோம். அதற்காக இனவாதத்தையோ, சாதி, குலம், இனத்தையோ நாம் பாதுகாப்பதில்லை. இலங்கை தேசத்திற்கு தான் முக்கியத்துவம் வழங்குவோம். அதில் எல்லாவற்றுக்கும் பதில் உண்டு. முஸ்லிம் மக்களுக்காக நாம் நிற்போம், முஸ்லிம் மக்களிடமும் அதையே கேட்டுக் கொள்கிறோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவிலிருந்து 440 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை இந்தியாவிலிருந்து 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால்...

இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும்...

ஊழல், மோசடியை மட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு

ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய...