மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைதான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேராவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளரான ரேணுக பெரேரா, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (5) காலை கைது செய்யப்பட்டார்.