follow the truth

follow the truth

January, 23, 2025
Homeலைஃப்ஸ்டைல்தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள்

தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள்

Published on

தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்கள், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பிரிகாம் பெண்கள் மருத்துவமனை தூக்கமின்மைக்கும், ரத்த அழுத்தம் அதிகரிப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்து 16 ஆண்டுகளாக, 25 முதல் 42 வயதுக்குட்பட்ட 66 ஆயிரம் பெண்களிடம் நடத்திய ஆய்வு முடிவுகளை, ஹைபர்டென்சன் இதழில் வெளியிட்டுள்ளது.

உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்று தூக்கமும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கமின்மை என்பது பல உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. தூக்கமின்றி அவதிப்படும் பெண்களுக்கு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியான தூக்கம், உடல் சீராக இயங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தூங்குவதில் பிரச்சினை அல்லது சரியான தூக்கமின்றி அவதிப்படும் பெண்களின் ரத்த அழுத்தம் எளிதாக அதிகரிப்பதை கண்டறிந்தோம்.இது போன்று 25,987 பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது.

தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கும் பெண்களின் ரத்த அழுத்தத்தை, குறைந்த மணி நேரம் தூங்கும் பெண்களின் ரத்த அழுத்த அளவோடு ஒப்பிட்டு பார்த்தோம். போதியளவு தூக்கமின்றி இருப்பது, ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. இது பெண்கள் தங்களது இதய ஆரோக்கியத்தை காக்க, தூக்கத்திற்கு அளிக்க வேண்டிய முன்னுரிமையை வெளிப்படுத்துகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பன்னீர் பிடிக்குமா? அடுத்த முறை சாப்பிடும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க…

ஒவ்வொரு நாளும் கலப்படம் செய்யப்பட்ட மளிகைப் பொருட்கள் சந்தையில் விற்கப்படுவது பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். பருப்பு வகைகள் முதல்...

வாசனை திரவியங்களில் மறைந்திருக்கும் ஆபத்து

தற்போதைய இளம் தலைமுறையின் இடையே வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது. மேலும் குளிர்காலத்தில் இன்னும் அதிகமாக...

வேலை செய்வதுபோல் நடிக்க சீனர்கள் கண்டுபிடித்த புதிய டெக்னிக்

சீனாவில் வேலையின்மையை மறைக்க அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து சும்மா இருக்கும் போக்கு டிரெண்டாகி வருகிறது. பல பெரிய நிறுவனங்கள் தொழிலாளர்களை...