டி10 சுப்பர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் நாளை(11) ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் குறித்த தொடரில் ஜஃப்னா டைட்டன்ஸ், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ், நுவரெலியா கிங்ஸ், கொழும்பு ஜகுவர்ஸ், கண்டி போல்ட்ஸ், மற்றும் காலி மார்வெல்ஸ் ஆகிய 06 அணிகள் பங்குபற்றவுள்ளன.
இதற்கமைய குழு Aவில் ஜஃப்னா டைட்டன்ஸ், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் மற்றும் நுவரெலியா கிங்ஸ் அணிகளும், குழு Bயில் கொழும்பு ஜகுவர்ஸ், கண்டி போல்ட்ஸ், மற்றும் காலி மார்வெல்ஸ் அணிகளும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளைக் பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறவுள்ள கண்கவர் ஆரம்ப விழாவைத் தொடரந்து ஜெவ்னா டைட்டன்ஸ் அணிக்கும் ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணிக்கும் இடையிலான முதலாவது போட்டி பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டியில் நுவர எலிய கிங்ஸ் அணியும் கலம்போ ஜகுவார்ஸ் அணியும் மோதவுள்ளன.
நாளை இரவு நடைபெறவுள்ள 3ஆவது போட்டியில் கண்டி பொல்ட்ஸ் அணியை கோல் மார்வல்ஸ் அணி எதிர்த்தாடும்.
லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யாவும் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.