follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1இன்றும் இடியுடன் கூடிய மழை

இன்றும் இடியுடன் கூடிய மழை

Published on

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்த வானிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...