நேற்று(18) தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக சிவப்பு நிற பாதுகாப்பு தலைக்கவசத்துடன் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் இணைக்கப்பட்டிருந்த இலக்கத் தகடு ஒரு காருக்கு பதிவு செய்யப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு கைரேகைத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் வெள்ளவத்தையைச் சேர்ந்த 46 வயது சுதத் குமார் காயமடைந்தார். அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என களுபோவில வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பாக தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுராத ஹேரத் தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.