ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடன்வல ஸ்வர்ண வாலுகாராம விகாரையில் வருடாந்திர எசல பெரஹெர இன்று (19) இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து மட்டுபடுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பெரஹெர ஊர்வலம் ஸ்வர்ண வாலுகாராம விகாரைக்கு அருகிலிருந்து ஆரம்பமாகி, கரவனெல்லயிலிருந்து கேகாலை கரவனெல்ல வீதி வழியாக ருவான்வெல்ல ராஜசிங்க கல்லூரிக்கு அருகில் வரை சென்று, மீண்டும் அவ்வீதி ஊடாக ஸ்வர்ண வாலுகாராம விகாரைக்கு வருகைதர திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி காலப்பகுதிக்குள் இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் பின்வரும் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பெரஹெர நிகழ்வு இடம்பெறும் காலப்பகுதிக்குள் நள்ளிரவு 12 மணி வரை வராவல சந்தி மற்றும் தல்துவ சந்தியில் இருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.