கியூபாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றில் அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை அமைச்சர் மார்த்தா எலினா பீடோ கப்ரேரா ஏழைகள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறினார்.
பிச்சையெடுப்பவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் ஏழைகள் போல நடிக்கிறார்கள் என விமர்சித்தார். அவரது கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவரை பதவி விலகக்கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து மார்த்தா எலினா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.