follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP2மோதலுக்குள் முயற்சியின் ஒளி - காசா மாணவர்கள் எதிர்கொள்கிற பரீட்சை பயணம்!

மோதலுக்குள் முயற்சியின் ஒளி – காசா மாணவர்கள் எதிர்கொள்கிற பரீட்சை பயணம்!

Published on

ஆதரவுடன் நடத்தப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளை மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

அங்கு உணவுக்காகக் காத்திருப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் படுகொலைகளை செய்து வருகிறது.

ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சில நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது சாப்பிடுகிறார்கள். சுத்தமான தண்ணீர் இல்லாமல் தொற்று நோய்கள் பரவி வேகமாக பரவி வருகின்றன.

இதற்கிடையே நேற்று, இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், காசாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் மேல்நிலைப் பாடசாலை பரீட்சைகளை எழுதினர்.

ஒக்டோபர் 2023க்குப் பிறகு காசாவில் பரீட்சைகள் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. 1,500 மாணவர்கள் வரை பரீட்சை எழுதியதாக தெரிகிறது.

காசா கல்வித் துறை இந்த பரீட்சை சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக தெரிவித்தது.

பல்கலைக்கழகப் படிப்பு கனவை நோக்கிய முதல் படி இந்த பரீட்சை. இணையம் மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் பரீட்சையினை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் காணி மோசடி

கடந்த 2019ஆம் ஆண்டு காலமான முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் பெயருடன் தொடர்புடைய ஒரு காணி மோசடி விவகாரம்...

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்

சவூதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ என அழைக்கப்பட்ட இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஜிஸ்,...

எதிர்வரும் 25 வரை பலத்த காற்று வீசக்கூடும்

தென்மேற்கு பருவ பெயர்ச்சி அதிகரிப்பு காரணமாக நாட்டில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசக்கூடும்...