இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், 44 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 31 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், தொழிலாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளும் உள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
இதன் மூலம், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும், மேலும் ஆய்வுகள் தொடர்கின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.