யுக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதற்கு டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர்.
சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இரு பெரிய ஹொலிவுட் ஸ்டுடியோக்களான டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஸ்னி (DIS.N) நிறுவனம் ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதாக நேற்று (28) அறிவித்தது.
அதனை தொடர்ந்து, இந்த வாரம் ரஷ்யாவில் ‘The Batman’ திரைப்படத்தை வெளியிடுவதை நிறுத்துவதாக WarnerMedia அறிவித்துள்ளது.