துப்பாக்கியால் செய்ய முடியாததை டொலரினால் செய்துகொள்ளும் எதிர்பார்ப்பிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்றதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சித் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மல்வத்து மாநாயக்க தேரரை நேற்று சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலண்ட், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் அவர் கூறியுள்ளார்.
அதாவது, யுத்தத்தினால் செய்ய முடியாததை, இதனூடாக செய்யப் பார்க்கின்றனர் என விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.