இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது ட்விட்டரில் பதிவொன்றினை பதிவிட்டதையடுத்து சமூக வலைத்தள பயனாளிகள் பல கேள்விகளால் அவரைத் தாக்கியுள்ளனர்.
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்ட நிலையில். சரியாக 1:58 மணிக்கு நாமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டார்.
அவரது பதிவை பார்த்த சமூக வலைதளவாசிகள், அமைச்சரே, தாங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்களா? நீங்கள் VPN ஐப் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து பதிவு செய்கிறீர்களா? பல கேள்விகளால் அவரை துளைத்துள்ளார்கள்.