அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட கஷாண்ட்ரா பெர்னாண்டோ என்ற பெண் வெற்றிபெற்றுள்ளார்.
கஷாண்ட்ரா பெர்னாண்டோ இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா ( லிபரல்) என்பவரை தோற்கடித்து விக்டோரியாவில் உள்ள ஹோல்ட் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
இவர் தனது குடும்பத்தினருடன் 11 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் வசித்து வந்ததுள்ளார்.