சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 20ஆம் திகதி மூடப்பட்ட சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய பணிகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தொழில்நுட்ப கோளாறினால் அதன் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இதேவேளை, எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகே தொடர்ந்தும் வரிசைகள் காணப்படுவதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.