எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறம் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன். வீட்டின் உரிமையாளர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.