கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் வாகன சாரதிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை அடுத்தாண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான 5,000 உபகரணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை காரணமாகவும் சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.