உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க ஜனாதிபதி மற்ற ஆறு ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் அவரது ரஷ்ய விஜயத்தின் போதாகும். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சமாதான முன்னெடுப்புகளை தொடங்குவதற்கான நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக இது அமைந்துள்ளது.
அதன்படி, தென்னாபிரிக்க ஜனாதிபதி நேற்று ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து உக்ரைன் நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவுக்கு வருவதற்கு முன், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கும் விஜயம் செய்தார்.
அங்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கியையும் சந்தித்தார்.
எவ்வாறாயினும், சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபடுவதற்கு முன்னர் அல்லது பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முன், உக்ரைன் பிரதேசத்தில் இருந்து ரஷ்ய இராணுவத்தை திரும்பப் பெறுவதற்கு ரஷ்யா நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்திருக்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன் என உக்ரைன் ஜனாதிபதி அங்கு வலியுறுத்தியிருந்தார்.