இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் (21) இந்தியா செல்லவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த பல முக்கிய சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.