விரைவில் தினசரி எரிபொருள் விலை திருத்தம்

1941

எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமையை அடுத்த வருடம் முதல் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது x கணக்கில் குறிப்பொன்றை இடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், எரிபொருள் விநியோகம் மற்றும் புதிய எரிபொருள் நிலையங்களின் எதிர்கால அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டது.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட இயக்க முறைமையில் தாக்கல் செய்வது குறித்து மேலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here