follow the truth

follow the truth

July, 19, 2025
HomeTOP1உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் - விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன் நிறைவு

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன் நிறைவு

Published on

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் (22) நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக கடந்த வருடமும் இந்தவருடமும் கல்விப் பொதுத் தராதரப் சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

நாட்டின் 100 கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில், ஒவ்வொரு வலயத்திலிருந்தும் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபாய் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு முதல் முறையாகத் தோற்றி, பரீட்சையில் சித்தி பெற்று, உயர்தரம் கற்கத் தகுதிபெற்று, அரச பாடசாலையிலோ அல்லது கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையிலோ கல்வி கற்றல் போன்றவை குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகளாக கருதப்படுகின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜகத் விதான எம்.பியின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது...

மலையகத்தில் மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றமையினால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெருந்தோட்டத்...

எதிர்வரும் 25 வரை பலத்த காற்று வீசக்கூடும்

தென்மேற்கு பருவ பெயர்ச்சி அதிகரிப்பு காரணமாக நாட்டில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசக்கூடும்...