follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்மெட்டா உடன் முறுகும் ஈரான்

மெட்டா உடன் முறுகும் ஈரான்

Published on

உலகெங்கும் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில், அமெரிக்காவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு தளங்கள் முன்னணியில் உள்ளன.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதால் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், தங்கள் கருத்துகள் மக்களை எளிதில் சென்றடைய இவற்றை பயன்படுத்துகின்றனர்.

மெட்டா எனும் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் இந்த 2 தளங்களும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய 2 தளங்களுக்கும் ஈரானில் தடை நிலவுகிறது.

ஆனாலும், பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் இவற்றை பெருமளவில் “விபிஎன்” (VPN) மூலம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், ஈரானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான 84-வயதாகும் “அயதுல்லா அலி கமேனி” (Ayatollah Ali Khamenei) பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் வைத்திருந்த சமூக வலைதள கணக்குகளை, கடந்த மாதம், மெட்டா நீக்கியது.

இதற்கு உலகம் முழுவதும் உள்ள கமேனி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

தற்போது இது குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒசைன் அமிர்-அப்தொல்லாகியான் (Hossein Amir-Abdollahian) தெரிவித்ததாவது:

“.. கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவும், கமேனியின் கோடிக்கணக்கான ஆதரவாளர்களை அவமானப்படுத்தும் விதமாகவும் மெட்டாவின் இந்த நடவடிக்கை உள்ளது.

கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரை 50 லட்சத்திற்கும் மேல் பயனர்கள் பின் தொடர்கின்றனர்.

பலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலை கொண்டவர் கமேனி.

கருத்து சுதந்திரம் குறித்து மேற்கத்திய நாடுகள் பெருமளவு பிரசாரங்கள் செய்கின்றன.

ஆனால், அவை வெற்று முழக்கங்கள் என தற்போது தெளிவாகி விட்டது.

தனது நடவடிக்கை மூலம் அவர்களின் மறைமுக அரசியல் உள்நோக்கங்கள் வெற்றி பெற மெட்டா உதவுகிறது..” இவ்வாறு அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...