பாதியில் நிறைவடைந்துள்ள கொடகம – ஹோமாகம வீதியின் முதலாம் பாகத்தை நிறைவு செய்வதற்கு அபிவிருத்திக்கான சவூதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த வீதியின் எஞ்சிய வேலைகளுக்காக 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையானதுடன், அதற்கு தேவையான எஞ்சிய 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவுதி நிதியத்தால் நிதியளிக்கப்படுகின்ற வீதி வலையமைப்புக்கள் அபிவிருத்தி கருத்திட்டத்தின் கடன் தொகையிலிருந்து வழங்குவதற்கு அபிவிரிருத்திற்கான சவுதி நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.