ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பை உறுதி செய்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குத் தேவையான பூரண ஆதரவை வழங்குதல், வேட்பாளர்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்விற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டம் ஒழுங்கை பேணுதல் என்பன குறித்து இங்கு ஆராயப்பட்டது.
அத்துடன், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.