அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன பக்கங்களில் பகிரப்படுவது போன்ற ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது.
அந்த போலிச் செய்தியில் ஏத்திவருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பாணியில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
அந்த செய்திக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை எங்களுடைய செய்தி ஆசிரியர் குழாம் அறிவிக்கிறது. குறிப்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மற்றும் அமைப்பின் லோகோவுடன் இவ்வாறான செய்திகள் பல இடங்களில் உலா வருகின்றன.
இது தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளன.
அத்தோடு குறிப்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை எந்த அரசியல் கட்சியை ஆதரித்தோ அல்லது எந்த அரசியல் நிலைப்பாட்டையோ இதுவரை எடுத்ததில்லை என்று அவர்களின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளார்கள்.