follow the truth

follow the truth

October, 12, 2024
HomeTOP1எதிர்க்கட்சி கூட்டணி குறித்து இன்று பல கலந்துரையாடல்கள்

எதிர்க்கட்சி கூட்டணி குறித்து இன்று பல கலந்துரையாடல்கள்

Published on

இவ்வருட பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் குழுக்களும் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், இன்று (26) பல கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் மற்றும் சின்னம் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதோடு, கூட்டணி அமையுமாயின் அதற்கு தேவையான அடிப்படை செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருக்கு ஆதரவளித்த குழுவினருடன் இன்று மாலை 4.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருக்கு ஆதரவளித்த குழுவினருடன் இன்று மாலை 4.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி – சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான...

பொதுத் தேர்தல் – 74 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

2024 பொதுத் தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக...

உலக உணவுத் திட்டம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று(11) ஜனாதிபதி...