ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டாரவிடம் கையளிக்கப்பட்டது..