follow the truth

follow the truth

October, 3, 2024
HomeTOP1தபால் மூல வாக்களிப்பு : தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

தபால் மூல வாக்களிப்பு : தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

Published on

பாராளுமன்ற தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 2024.10.01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024.10.08ஆம் திகதியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 வாக்காளர் இடாப்பே இதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூல வாக்கிற்கு விண்ணப்பித்த அனைத்து வாக்காளர்களும் இம்முறை தேர்தலுக்காக மீண்டும் தமது தபால் மூல வாக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் கட்டாயமானது.

அதன் பிரகாரம், தகைமையுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுடைய விண்ணப்பங்களும் 2024.10.08ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய மாவட்டத்தின் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்குக்கு (மாவட்டத் தேர்தல் அலுவலகம்) கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்தல் வேண்டும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை

நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர்...

பொதுத்தேர்தல் – இ.தொ.கா இறுதி முடிவு விரைவில்

பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை விரைவில் கூடவுள்ளது என...

தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டம்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு...