இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிபுரியும் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
பேருந்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் ஜன்னல்களை உடைத்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ளனர். விபத்தில் ஒருவரது காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எனினும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.