follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP2இலங்கையில் உள்ள 5,000 மருந்தகங்களில் பெரும்பாலானவற்றில் மருந்தாளுநர்கள் இல்லை

இலங்கையில் உள்ள 5,000 மருந்தகங்களில் பெரும்பாலானவற்றில் மருந்தாளுநர்கள் இல்லை

Published on

அரச வைத்தியசாலைகளிலும் மருந்தாளுநர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், இலங்கையில் உள்ள 5,000 மருந்தகங்களில் பெரும்பாலானவற்றில் மருந்தாளுநர்கள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, மருந்தகங்களை மூடுவது அல்லது மருந்து வழங்கலை தன்னிச்சையாக முன்னெடுப்பது பொருத்தமான பதிலாக அமையாது எனவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வீதி போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கோரினார்.

மாறாக, காலக்கெடுவுடன் கூடிய திட்டமொன்றை உருவாக்கி, தகுதிவாய்ந்த மருந்தாளுநர்களை நியமிக்கும் வரை முறையான செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(18) இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மருந்தகத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மருந்துகளை வழங்கும் செயல்பாடானது தொழில் முறை சார் செயல்முறையொன்றாகும். இது முக்கியத்துவம் வாய்ந்ததொரு செயல்முறையாகும். அரச வைத்தியசாலைகளில் கூட மருந்தாளுநர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. ஆகையால் கொள்கையளவில் நாம் சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மருந்தாளுநரின் செயல்முறை தொழில் முறை நிபுணத்துவம் வாய்ந்ததொரு செயல்முறை என்பதால், அந்தத் தகுதி உள்ள ஒருவரால் அது மேற்கொள்ளப்பட வேண்டும்.

சமார் 5 ஆயிரம் மருந்தகங்கள் காணப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் மருந்தாளுநர்கள் இல்லை. எனவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண காலக்கெடுவுடன் கூடியதொரு திட்டமொன்று தேவையாகும் . மருந்தகங்களை மூடுவதோ அல்லது மருந்து வழங்கும் செயன்முறையை தாம் விரும்பிய வகையில் முன்னெடுப்பதோ இந்தப் பிரச்சினைக்கான பதிலாக அமையாது.

பொது மக்கள் குறித்து சிந்தித்து அதற்கேற்ப செயல்படுங்கள். இச்சமயம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, மருந்தகங்கள் முறையாகச் செயல்படுவதோடு, தகுதிவாய்ந்த மருந்தாளுநர்களால் முறையாகப் பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இது தொடர்பான வேலைத்திட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன். இந்தப் பற்றாக்குறை தீரும் வரை நடுநிலையிலிருந்து செயல்படுங்கள். உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களை ஒப்பந்த முறையின் மூலம் இடைநிலைப் பயிற்சியை வழங்கி மேற்பார்வையின் கீழ் பணியமர்த்த நடவடிக்கை எடுங்கள். மருந்துகளை ஒழுங்கற்ற முறையில் வழங்குவது தவறாகும். இதுபோன்ற இடைநிலை தீர்வுக்கு செல்லுங்கள். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் நான் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பேன் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60...

ஜகத் விதான எம்.பியின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது...

மலையகத்தில் மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றமையினால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெருந்தோட்டத்...