follow the truth

follow the truth

July, 21, 2025
Homeவிளையாட்டுஉலக செம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் : இந்தியா-பாகிஸ்தான் போட்டி இரத்து

உலக செம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் : இந்தியா-பாகிஸ்தான் போட்டி இரத்து

Published on

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக செம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இன்று (20) நடைபெறவிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில், பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மறுப்பு தெரிவித்ததால், போட்டி ரத்தாகியுள்ளது.

இந்தியாவின் ஹர்பஜன் சிங், ஷிகர் தவான், இர்பான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பாகிஸ்தானுடன் ஆட மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தியிடுகின்றன.

இதனைத் தொடர்ந்து, “தேசத்திற்கு மேல் எதுவும் கிடையாது. மே 11 அன்று எடுத்த முடிவில் நிலைத்திருக்கிறேன்” என முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான் தனது X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட ஏனைய வீரர்களும் இதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளதுடன், இந்திய அணி முழுமையாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுக்கும் நிலைப்பாட்டில் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பொறாமை என நினைக்கிறீர்களா?” – ஹர்பஜன் அஸ்வினை நேருக்கு நேர் கேள்வி

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் சிங் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடையே சமூக வலைதளங்களில் பிரச்சினை...

இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப போகும் ஷமி

இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தற்போது நடைபெற்று வரும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை 2025 தொடருக்காக இங்கிலாந்து...

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள்

2024ஆம் ஆண்டு, விளையாட்டுகளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களுக்கான அதிகமான முறைப்பாடுகள் கிரிக்கெட் தொடர்பாகவே பெறப்பட்டுள்ளதாக, விளையாட்டு குற்றச்செயல்கள் தடுக்கும் விசேட...