follow the truth

follow the truth

July, 19, 2025
HomeTOP1மற்றொரு நோயாளி மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

மற்றொரு நோயாளி மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

Published on

கெனியூலாவில் (cannula) ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக காய்ச்சல் நோயாளி ஒருவர் நேற்று (13)  உயிரிழந்துள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளர் ஆவார்.

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த கெனியூலாவில் இருந்து கிருமித் தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சலினால் காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கெனியூலாவில் தொற்று ஏற்பட்டு அவை உடலில் கலந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இருதய நோயாளர் என்பதால் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற வைத்தியர்கள் முயற்சித்தனர்.

ஆனால் அங்கு அவர் இறந்தார், மேலும் கெனியூலாவில் இருந்த பாக்டீரியா தொற்று மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் கருதுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜகத் விதான எம்.பியின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது...

மலையகத்தில் மழை – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றமையினால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெருந்தோட்டத்...

எதிர்வரும் 25 வரை பலத்த காற்று வீசக்கூடும்

தென்மேற்கு பருவ பெயர்ச்சி அதிகரிப்பு காரணமாக நாட்டில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசக்கூடும்...