follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுநோயாளிகளின் உயிரைப் பறிக்கும் தரப்பினர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் தரப்பினர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published on

மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை, தரமற்ற மருந்துப் பாவனை, நோயாளிகள் கவனிப்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அலட்சியத்தால் பல நோயாளிகளின் உயிர்கள் இந்நாட்களில் பலியாக்கப்பட்டதாகவும், இந்நிலைமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மருத்துவமனைகளிலுள்ள தரம் குறைந்த மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்றும், நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் தரப்பினர் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வங்குரோத்தான இந்நாட்டில் மருந்துப்பொருட்கள் மாபியா செயல்படுவது கேவலமாக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பேராதனை போதனா வைத்தியசாலையிலும், நுவரெலியா வைத்தியசாலையிலும், ராகம போதனா வைத்தியசாலையிலும், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையிலும், பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலியிலும், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும், குளியாபிட்டிய வைத்தியசாலையிலும் அதிகளவான உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், இந்தப் பட்டியலைப் பார்க்கும் போது, தரம் குறைந்த மருந்துப் பாவனையினாலும் மருந்துப் பொருட்கள் துறையில் ஏற்பட்டுள்ள மோசடிகளினாலும், பரிசோதனைகளில் பொருத்தமற்றவை என கண்டறியப்பட்ட மருந்துப் பொருட்களைப் பயன்படுத்தியமையினால் பேரழிவு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிலையியற் கட்டளைகள் 27(2)இன் கீழ் இன்று (18) பாராளுமன்றத்தில்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுகாதார அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சரிடமும் அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சித் தலைவர் பல கேள்விகளை முன்வைத்ததுடன், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதுபோன்ற பிரச்சினைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் அரச அதிகாரிகள் மீது அரசாங்கம் பொய் விசாரணை நடத்துவதாகவும், இதுபோன்ற போலியான விசாரனைகளை நடத்தி சுகாதாரத்துறை அதிகாரிகளின் வாயை அடைப்பதன் மூலம் நாட்டில் 220 இலட்சம் பேரையும் மரண படுக்கைக்கு இட்டுச்செல்லும் சுகாதாரக் கொள்கையைத் தோற்கடிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தக் கொலைகள் திட்டமிட்ட குற்றங்கள் என்றும், இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...

ஜகத் விதானவின் மகன் விளக்கமறியலில்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன், ரசிக விதானவை ஓகஸ்ட் 1...