பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் என விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இனப்பெருக்க நிலையம் மற்றும் பண்ணை நடவடிக்கைகளை மக்கள் அவதானிக்க முடியும் எனவும் புதிய விவசாய தொழில்நுட்பம், புதிய நெல் வகைகள் மற்றும் புதிய உற்பத்திகள் பற்றிய புரிதலை பெற விவசாயிகள் பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தருமாறு விவசாய திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.