கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை (19) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வை வழங்குவதில் தொடர்ந்தும் தவறியமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.