2015 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 98 சதவீதமான அரச நிறுவனங்கள் மேம்பாட்டை எட்டியுள்ளதாக அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
அதேபோல் மக்கள் பணம் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் 2048 இல் அபிவிருத்து அடைந்த நாடு என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இலக்குக்கு அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அரச நிதிக் கட்டுப்பாடு தொடர்பிலான பொறுப்பு அரசியலமைப்பின் ஊடாகவே பாராளுமன்றத்தின் மீது சாட்டப்பட்டுள்ளது. அந்த பணியை உரிய வகையில் முன்னெடுத்துவரும் அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.