நாடளாவிய ரீதியில் வடக்கு, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரி விரதம் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு இவ்வாறு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சுகள் அறிவித்துள்ளன.
இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றையதினம் இடம்பெறவேண்டிய கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளில் இன்றைய தினத்துக்கான கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படவில்லை.