இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இன்று (07) மாலை அல்லது இரவு வேளையில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனினும் நாட்டில் பெரும்பாலும் பகுதிகளில் சீரான காலநிலையே நிலவி வருகிறது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.