தபால் வாக்காளர்கள் தங்கள் வாக்கை எங்கு செலுத்துவார்கள் என்பதையும், சான்றளிக்கும் அதிகாரியையும் அடையாளம் காண உதவும் வகையில் ‘இ’ சேவை நடைமுறையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும், அவர்களின் குழுக்கள் மற்றும் கட்சிகளையும், அவர்களின் சின்னங்களையும் அடையாளம் காண எளிதாக்கியுள்ளது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
eservices.elections.gov.lk என்ற இணைப்பின் மூலம் தேர்தல் ‘e’ சேவையை அணுக முடியும்.
மேலும், பொது அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு தகவல்களுக்கான இணைப்பையும் இங்கு அணுகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.