follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுகடலில் மூழ்கிய இரு மாணவர்கள் சடலங்களாக மீட்பு!

கடலில் மூழ்கிய இரு மாணவர்கள் சடலங்களாக மீட்பு!

Published on

மட்டக்களப்பு, கிரான் நாகவத்தை கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரானைச் சேர்ந்த ச. அக்சயன் வயது (16) மற்றும் ஜீ. சுஜானந்தன் வயது (16) ஆகிய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.

நேற்று முன்தினம் கிரான் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் ஒன்றாகச் இணைந்து கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளை கடல் அலையினால் மூவர் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது ஒருவர் உடனடியாக காப்பாற்றப்பட்டார். இருவர் காணமல் போயிருந்தனர். இவர்களை தேடும் பணியில் இரண்டு நாட்களாக கடற்கடையினர், கல்குடா சுழியோடிகள் அமைப்பு, மற்றும் உள்ளுர் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையிலேயே அவர்கள் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...