எரிபொருள் பற்றாக்குறையால், 2 மின் ஆலைகள் மூடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் பெறப்பட்ட எரிபொருள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க அதிக எரிபொருளைப் பெறுவதற்கான விவாதங்கள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 63 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் சற்று முன்னர் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது.