சுங்கத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உரிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலர் கையிருப்பை பெற்றுக் கொள்வது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.