ஆறு மாதங்களுக்கு மின்சாரத்தை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு மின்சார சபைக்கு விலைமனுக் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெண்டர் கோரும் போது பெரிய மற்றும் சிறிய அளவிலான மின்சார விநியோகஸ்தர்களிடம் இருந்து விலைமனுக்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகேவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.