follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுதிருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றில் முன்வைப்பு

திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றில் முன்வைப்பு

Published on

திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் இன்று  பாராளுமன்றில்  முன்வைக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் குறித்த ஒப்பந்தம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்தி செய்வதற்காக காணி ஆணையாளர் நாயகம், திறைசேரியின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் Trinco Petroleum Terminal தனியார் நிறுவனம் ஆகியன குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

இதற்கமைய, 99 எண்ணெய் தாங்கிகளில் 85 எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கும் ஏனைய 14 எண்ணெய் தாங்கிகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...