யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் இன்று (16) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
குறித்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று (16) முதல் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.