5 வயது ஆப்கானிஸ்தான் சிறுவன் மூன்று நாட்களாக கிணற்றில் சிக்கியிருந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக அந்நாட்டில் உள்ள தலிபான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு ஆப்கானிஸ்தானின் சாபுல் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த செவ்வாய்கிழமை சுமார் 82 அடி ஆழடமுடைய கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியை உதவி ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர்.
அப்போது ,குழந்தையின் உடலின் மேல் பகுதி மட்டும் நகரும் வகையில் கிணற்றில் சிக்கியிருந்ததை அவதானித்துள்ளனர். அதை தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் சிறுவனின் உயிரைக்காப்பாற்ற முடியவில்லை.
மேலும் ,மொராக்கோவின் கிராமப்புற பகுதியில் உள்ள 104 அடி ஆழ்துளை கிணற்றில் நான்கு நாட்களாக சிக்கி உலக கவனத்தை ஈர்த்த ரியான் என்ற குழந்தை இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்ததை அடுத்து ஆப்கானிஸ்தானில் சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது.