follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுகைவிடப்பட்ட மைதானத்தினால் 10 கோடி ரூபா நட்டம்

கைவிடப்பட்ட மைதானத்தினால் 10 கோடி ரூபா நட்டம்

Published on

நுவரெலியாவில் விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டமையின் ஊடாக, 10 கோடி ரூபாவிற்கு அதிக தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு மைதானம் 2019ம் ஆண்டு திறப்பதற்கு திட்டமிடப்பட்ட நிலையில், 2020ம் ஆண்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியாவில் 34 ஹெக்டயர் நிலப் பரப்பில் இந்த மைதானத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டது.

மெய்வல்லுநர் போட்டிகள், கபடி, கூடைபந்து, ஹொக்கி, உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களை நடத்தும் வகையில் இந்த விளையாட்டு மைதான தொகுதி நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது.

உள்ளக மற்றும் வெளியக போட்டிகளையும் இந்த விளையாட்டு மைதான தொகுதியில் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்திற்கு 75,528,700 யுரோ நிதி செலவிட தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிதித் தொகையில் 70 சதவீதம் பிரித்தானிய நிதி நிறுவனத்தின் ஊடாகவும், எஞ்சிய தொகையை மக்கள் வங்கி ஊடாகவும் கடன் அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டது.

இவ்வாறு நிர்மாணிக்கப்படவிருந்த மைதான கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டமையின் ஊடாக, பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர்...