பௌத்த விவகார திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் திரிபிடக நூல் திருத்தக்குழுவினால் மொழிபெயர்க்கப்பட்ட 07 திரிபிடக நூல்கள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (24) அலரி மாளிகையில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது.
புத்த ஜயந்தி திரிபிடக சபையின் நீட்சியாக நியமிக்கப்பட்ட திரிபிடக நூல் திருத்தக்குழு பல ஆண்டுகளாக, திரிபிடக நூலின் மொழிப்பெயர்ப்பு அடிப்படை பௌத்த மொழிக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் அர்த்தம் மாறாத வகையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுருக்க திரிபிடக நூல் தொகுதி எண் 20 முதல் 27 வரை சிங்கள மகாநித்தேச பாலி, சிங்கள சுல்லனித்தேச பாலி, சிங்கள படிசம்பிதாமக்கப்பகரன பாலி – 1, சிங்கள படிசம்பிதாமக்கப்பகரன பாலி – 2, சிங்கள தேர அபதன பாலி – 2, சிங்கள தேரி அபதன பாலி – 2 சிங்கள புத்தவங்ஷ பாலி மற்றும் சரியா பிடக பாலி என 07 நூல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டன.
பிரதமரினால் திரிபிடக நூல் திருத்தக் குழுவின் உறுப்பினர் ராஜகீய பண்டித – அக்கமஹா பண்டித, இலங்மை அமரபுர ஸ்ரீ தர்மரக்ஷித மஹாநிகாயவின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திருகோணமலை ஆனந்த தேரர் உள்ளிட்ட வருகைத்திருந்த மஹாநாயக்கர்களுக்கு இந்நூல் வழங்கப்பட்டது.
புத்த ஜெயந்தி நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு மிகவும் துல்லியமாக இருந்தாலும், அதன் சொற் பிரயோகங்கள் சராசரி வாசகனுக்கு மிக ஆழமாக இருந்ததால், அந்த நூல் பட்டியல்களை மிக எளிமையாகவும் எளிதாகவும் தொகுத்ததன் விளைவாக இந்த சுருக்கமான திரிபிடக நூல் தொகுப்பு வெளியிடப்பட்டது.
புத்தசாசன சமய மற்றும் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களினால் நூல்கள் குறியீட்டு ரீதியாக மஹாசங்கத்தினருக்கு வழங்கிவைக்கப்பட்டது.