இன்று உலக செவித்திறன் தினமாகும் .உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி ஆண்டுதோறும் மார்ச் 3ம் திகதி ‘உலக செவித்திறன் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் ஐந்தில் ஒருவர் காது கேளாமையால் பாதிக்கப்படுவதாகவும் , ஆடியோ-விஷுவல் கருவிகளைப் பயன்படுத்தும்போது அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் விந்தியா குமாரபேலி இதனைத் தெரிவித்தார்.