இலங்கை செங்கொடி சங்கமும், இலங்கை தொழிற்சங்க சம்மேளனமும் இணைந்து கொழும்பில் உள்ள தொழில் திணைக்களத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுக்க உள்ளனர்.
கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்புத் தெரிவித்தமையால் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் அநீதிகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்படும் இப்போராட்டத்துக்கு தொழில் அமைச்சு உரிய தீர்வை வழங்கவில்லை என்றால் தொடர்ந்து இப்போராட்டத்தை இரவு பகலாக முன்னெடுக்கவும் போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.